ஐடன்டிடி படப்பிடிப்பில் பங்கேற்றார் த்ரிஷா... படப்பிடிப்பு தீவிரம்...

ஐடன்டிடி படப்பிடிப்பில் பங்கேற்றார் த்ரிஷா... படப்பிடிப்பு தீவிரம்...

இயக்குநர்கள் அகில் பால், அனஸ் கான் இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் ஃபாரன்ஸிக். டொவினோ தாமஸ், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த அத்திரைப்படம் அந்த ஆண்டின் வெற்றிப் படமாக அமைந்தது. இந்நிலையில், இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. அகில் பால்,அனஸ்கான் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடிக்கும் புதிய படத்துக்கு ‘ஐடன்டிடி’ என தலைப்பு வைக்கப்பட்டது. படத்தில் நாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளார். வினய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

nullதற்போது படப்பிடிப்பில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் த்ரிஷாவும், டொவினோ தாமஸூம் இணைந்து நடந்து செல்லும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 
 

Share this story