மலையாளத்தில் த்ரிஷா நடிக்கும் ஐடென்டிடி படப்பிடிப்பு தொடக்கம்

மலையாளத்தில் த்ரிஷா நடிக்கும் ஐடென்டிடி படப்பிடிப்பு தொடக்கம்

டொவினோ தாமஸ் மற்றும் த்ரிஷா நடிப்பில் உருவாகும் ஐடென்டிடி படத்தின் படப்பிடிப்பு கோவாவில் தொடங்கியுள்ளது. 

இயக்குநர்கள் அகில் பால், அனஸ் கான் இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் ஃபாரன்ஸிக். டொவினோ தாமஸ், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த அத்திரைப்படம் அந்த ஆண்டின் வெற்றிப் படமாக அமைந்தது. இந்நிலையில், இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. அகில் பால்,அனஸ்கான் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடிக்கும் புதிய படத்துக்கு ‘ஐடன்டிடி’ என தலைப்பு வைக்கப்பட்டது. படத்தில் நாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளார். வினய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் தொடங்கி நடைபெற்று வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. மலையாளத்தில் த்ரிஷா நடிக்கும் ஐடென்டிடி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
 

Share this story