தேஜஸ் படம் பார்த்து கண் கலங்கிய உ.பி. முதல்வர்

தேஜஸ் படம் பார்த்து கண் கலங்கிய உ.பி. முதல்வர்

சர்வேஷ் மேவாரா இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ள படம் தேஜஸ். 2016 ஆம் ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக இந்திய விமானப் படை போர் விமானங்களை இயக்குவதற்கு 3 பெண் விமானிகள் நியமிக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டே தொடங்கப்பட்ட இப்படத்தின் வெளியீடு பல்வேறு காரணங்களால் தாமதமானது. இத்திரைப்படம் கடந்த 27-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. 

தேஜஸ் படம் பார்த்து கண் கலங்கிய உ.பி. முதல்வர்

வெளியான முதல் நாளில் இருந்தே இந்த திரைப்படம் வசூலில் சரிவைச் சந்தித்து வருகிறது. பல திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்ட கங்கனா, 'திரையரங்குகளுக்குச் சென்று படங்களை பார்த்து மகிழுங்கள். இல்லை என்றால் திரையரங்கை நடத்துகிறவர்கள் வாழ முடியாது' என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு இந்தப் படம் லக்னோவில் சிறப்புக் காட்சியாகத் திரையிடப்பட்டது. அவருடன் அமைச்சர்களும் டத்தைப் பார்த்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இதுகுறித்து பேசிய கங்கனா, படத்தைப் பார்த்துவிட்டு யோகி ஆதித்யநாத் கண் கலங்கினார்.அவர் எங்களை ஆதரிப்பதாகவும் கூறினார் என்று தெரிவித்தார்.

Share this story