செஃப்பாக மாறிய "அனுஷ்கா"-'அன்விதாரவளிஷெட்டி'-யைஅறிமுகப்படுத்திய படக்குழு:

photos

அனுஷ்காவின் பிறந்தநாளை முன்னிட்டுஅன்விதா ரவளி ஷெட்டி'-யை அறிமுகப்படுத்தியுள்ளனர் படக்குழுவினர்.

photos

இன்று அனுஷ்கா தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதை முன்னிட்டு திரைபிரபலங்கள், ரசிகர்கள் என பலருமே வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பொதுவாகவே பிரபலங்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர்கள் நடிக்கும் அல்லது நடிக்க இருக்கும் படங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாவது வழக்கம், அந்த வகையில் அனுஷ்காவின் பிறந்த தினமான இன்று  அவரின் அடுத்த படத்தின் தகவல்தாங்கிய போஸ்ட்டர் வெளியாகியுள்ளது.

photos

அந்த போஸ்ட்டரில் அனுஷ்கா செஃப் ஆக காட்சியளிக்கிறார். யு வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நீரவ் ஷா ஒளிபதிவு செய்ய , ஜாதி ரத்னலு புகழ் நவீன் பாலிஷெட்டி இப்படத்தின் நாயகனாக நடிக்கிறார். தற்காலிகமாக 'புரொடக்க்ஷன் நம்பர் 14' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை மகேஷ் பாபு பி இயக்குகிறார்.

photos

இந்த திரைப்படம் அனுஷ்காவின் 48-வது படமாக தயாராக உள்ளது.படம் குறித்த மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிப்பார்க்கலாம்.

 

Share this story