இத்தாலியில் கோலாகலமாக நடைபெற்றது வருண் -லாவண்யா திருமணம்
1698904674928

தமிழில் சசிகுமாரின், 'பிரம்மன்' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் லாவண்யா. தொடர்ந்து, 'மாயவன்' என்ற படத்தில் அவர் நடித்தார்.
தெலுங்கில் பெரும்பாலான படங்களில் நடித்து வரும் இவரும், நடிகர் வருண் தேஜும் காதலித்து வந்தனர். இருவரும் 'அந்தாரிக்ஷம்' என்ற படத்தில் நடித்த போது காதலிக்கத் தொடங்கி இருக்கின்றனர். இவர்கள் காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து சில மாதங்களுக்கு முன் ஆந்திராவில் நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்நிலையில், இத்தாலியில் டசுக்கனி நகரில் இருவரின் திருமணமும் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. இதில், பிரபல தெலுங்கு நட்சத்திரங்கள் சிரஞ்சீவி, அல்லு அர்ஜூன், ராம் சரண், பவண் கல்யாண் ஆகியோர் கலந்துகொண்டனர். திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்ற