திரையை தீ பிடிக்க வைத்த ‘வீர சிம்ஹா ரெட்டி’ – படம் எப்படி இருக்கு?

photo

இயக்குநர் கோபிசந்த் மல்லினேனி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் இன்று வெளியான திரைப்படம் “வீர சிம்ஹா ரெட்டி’, இந்த படத்தில் இவர் அப்பா, மகன் என்ற இரண்டு வேடத்தில் நடித்துள்ளார், இந்த நிலையில் படத்தின் ட்விட்டர் விமர்சனம் பற்றி காணலாம்.

photo

வீரசிம்ஹா ரெட்டி படத்தில் தந்தை காதாப்பாத்திரத்திற்கு ஜோடியாக ஹனிரோஸ் மற்றும் மகனிற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளனர். கதாநாயகிகளாக இவர்கள் இருக்க, வில்லியாக வரலெட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். தமன் இசையில் உருவான இந்த படத்தில் வழக்கமான பாலகிருஷ்ணா படங்களின் சாயல் சற்று தூக்கலாகவே உள்ளது.

photo

படம் மோசமான விமர்சனத்தை பெறுள்ளது, வழக்கமான கதை, எப்புட்ரா….. என கேட்க தோன்றும் ஆக்க்ஷன் காட்சிகள் என படம் செமபோர் அடிப்பதாக ரசிகர்கள் கருத்து பகிர்ந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக  வெளிநாடு தியேட்டர் ஒன்றில் திரை தீப்பற்றி எரிந்ததால் படத்தின் காட்சி நிறுத்தப்பட்டது. அந்த வீடியோ டிரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கதுபடத்திற்கு படுமோசமான ரேட்டிங் கிடைத்து வருவதால் படக்குழு முகுந்த அப்செட்டில் உள்ளனர். 

Share this story