'கஸ்டடி'-யை முடித்த நாக சைதன்யா.. கொண்டாட்ட வீடியோ வெளியீடு !

custody

 வெங்கட் பிரபு மற்றும் நாகசைதன்யா கூட்டணியில் உருவாகி வந்த 'கஸ்டடி' படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தெலுங்கில் வேகமாக வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் நாகசைதன்யா. அவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் 'கஸ்டடி'. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தை சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

custody

இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இவர்களுடன் அரவிந்த் சாமி, பிரேம்ஜி, சரத்குமார், வெண்ணிலா கிஷோர், பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவும், இளையராஜாவும் இணைந்து இசையமைத்து வருகின்றனர்.

custody

இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பும் நிறைவுபெற்ற நிலையில் பாடல்களின் படப்பிடிப்பு மட்டும் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வந்தது. இந்நிலையில் இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவுபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி கொண்டாட்ட வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

Share this story