கஸ்டடிக்காக 7 பிரம்மாண்ட செட்டுகள்.. மாஸ் பண்ணும் வெங்கட் பிரபு !

custody

நாக சைதன்யாவின் நடிப்பில் உருவாகும் ‘கஸ்டடி’ படத்தின் பாடல்களை இயக்குனர் வெங்கட் பிரபு பிரம்மாண்டமாக படமாக்கி வருகிறார். 

தமி​ழின் முன்னணி இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கஸ்டடி’. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தை சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவும், இளையராஜாவும் இணைந்து இசையமைத்து வருகின்றனர். 

custody

இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அரவிந்த் சாமி, பிரேம்ஜி, சரத்குமார், ராம்கி, வெண்ணிலா கிஷோர், பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் மே மாதம் 12-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள அன்னப்பூர்ணா ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. இந்த பாடல் படப்பிடிப்பிற்காக மட்டும் தற்போது எழு பிரம்மாண்ட செட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் கலர்புல்லாக பாடல்கள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த பாடல்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story