வெங்கட் பிரபுவின் ‘கஸ்டடி’ டிரெய்லர் எப்போது ?.. முக்கிய அறிவிப்பு !

custoday
 நாகசைதன்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கஸ்டடி’ படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தமிழின் முன்னணி இயக்குனராக இருக்கும் வெங்கட் பிரபு இயக்கத்தில் தெலுங்கு நடிகர் நாகசைதன்யா நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘கஸ்டடி’. இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இவர்களுடன் அரவிந்த் சாமி, பிரேம்ஜி, சரத்குமார், வெண்ணிலா கிஷோர், பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

custoday

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவும், இளையராஜாவும் இணைந்து இசையமைத்து வருகின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தை சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்த படம் வரும் மே 12-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் டிரெய்லர் வரும் மே 5-ஆம்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story