விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்று படமான ‘விஜயானந்த்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

கர்நாடகத்தைச் சார்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகியிருக்கும் திரைப்படம், 'விஜயானந்த்.' 1976ஆம் ஆண்டில் ஒரே ஒரு வாகனத்துடன் சரக்கு போக்குவரத்து துறையில் கால் பதித்த விஜய் சங்கேஸ்வர், இன்று இந்தியா முழுவதும் அறியப்படும் வி.ஆர்.எல். எனும் மிகப்பெரிய சரக்கு போக்குவரத்து நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந்திருக்கிறார். இவரது வெற்றிப் பயணத்தின் பின்னணியிலுள்ள அவரது கடுமையான உழைப்பையும், அவர் சந்தித்த சவால்களையும் கதைக்களமாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கி இருக்கியிருக்கிறது.
கன்னடத்தில் தயாராகி, தொடர்ந்து தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மொழி மாற்றம் செய்து வெளியாகவுள்ளது இந்த படத்தை இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்துக்கு கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார்.
சுயசரிதை படைப்பாக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை வி.ஆர்.எல். பிலிம் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் டாக்டர் ஆனந்த் சங்கேஸ்வர் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, இறுதி கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தற்பொழுது இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரைலர் படத்தின் மீதான எதிபார்பை எகிற வைத்துள்ளது.