‘ஜெர்ஸி’ இயக்குனருடன் கைகோர்த்த விஜய் தேவரகொண்டா... பிறந்தநாளில் வெளியான புதிய பட அறிவிப்பு !

vd12

 நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளையொட்டி புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகராக இருப்பவர் விஜய் தேவரகொண்டா. தற்போது முன்னணி இயக்குனர் சிவ நிர்வணா இயக்கத்தில் ‘குஷி’ படத்தில் நடித்து வருகிறார். சமந்தா கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் பணிகள் இருவருப்பாக நடைபெற்று வருகிறது. 

vd12

இந்தப் படத்தை முடித்த பிறகு சூப்பர் ஹிட்டடித்த 'ஜெர்ஸி' படத்தின் இயக்குனர் கெளதம் தின்னுரி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் விஜய் தேவரகொண்டா நடிக்க உள்ளார். வித்தியாசமான கதைகளத்தில் உருவாகும் இந்த படத்தில் உளவுத்துறை அதிகாரியாக விஜய் தேவரகொண்டா நடிக்க உள்ளார். 

vd12

இந்த படத்தை பெரிய பட்ஜெட்டில் சித்தாரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்க உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இந்நிலையில் 'VD 12' என்று தற்காலிகமாக அழைக்கப்படும் இந்த படத்தின் அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதையொட்டி வெளியிடப்பட்டுள்ள போஸ்டர் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. 

 

 

கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்யும் படத்தை சிதாரா என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. அடுத்த மாதம் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இதனிடையே காஷ்மீரில் படமாக்கப்பட்ட விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' திரைப்படம் செப்டம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story