ஒரு வேல அப்படி இருக்குமோ? – இணையத்தை கலக்கும் 'விஜய் தேவரகொண்டா'வின் பதிவு.

photo

தெலுங்கு ஹீரோவான விஜய் தேவரகொண்டா ‘அர்ஜூன் ரெட்டி’ படம் மூலமாக  தென்னிந்தியா முழுவதும் பிரபலமாகி  பல இளம் பெண்களின் கிரஷ்ஷாக மாறினார். தொடர்ந்து பல படங்கள் நடித்து வந்தார். குறிப்பாக இளம் நாயகியான ராஷ்மிகாவுடன் அதிக படம் நடித்ததால் இருவரும் காதலிப்பதாக செய்திகள் பரவி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டது. ஆனால் இந்த செய்திக்கு இருதரப்பிலிருந்து எந்த வித பதிலும் வராமல் இருந்தது.

photo

இந்த நிலையில் சமீபத்திய விஜய் தேவரகொண்டாவின் பதிவில் ஆண் பெண் கைகள் ஒன்றாக கோர்த்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ‘நிறைய நடக்கிறது, ஆனால் இது உண்மையிலேயே ஸ்பெஷலானது. விரைவில் அறிவிக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு வேல இது படத்தின் அறிவிப்பா? அல்லது விஜய் தனது காதலி குறித்து அறிவிக்கதான் இப்படி குறிப்பிட்டுள்ளாரா?. என தங்களது யூகங்களை கூறி வருகின்றனர்.

photo

Share this story