‘குஷி’ பட வெற்றி –100 குடும்பங்களுக்கு தலா 1லட்சம் கொடுக்கும் ‘விஜய் தேவரகொண்டா’.

photo

விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இணைந்து நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘குஷி’. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இருந்தாலும் நல்ல வசூலை கொடுத்து வருவதாக போஸ்டர் மூலமாக படக்குழு தெரியப்படுத்தி வருகின்றனர்.


இந்த நிலையில் குஷி படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் விஜய் தேவரகொண்டா அசத்தலான விஷயத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது ரூ 1 கோடியை ரசிகர்களுடன் பகிந்துகொள்ள உள்ளார். 100 ஏழை குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் என பகிர்ந்து வழங்குவதாக  விஜய் அறிவித்துள்ளார். இதனை கூறியதும் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்துள்ளனர். மேலும் அதற்கான விண்ணப்ப படிவ லிங்கையும் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  மேலும் இந்த தொகை படிப்பு மற்றும் மருத்துவ செலவுகளுக்கு உதவினால் மகிழ்ச்சியாக இருக்குமென தெரிவித்துள்ளார். இதற்கு  பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

photo

ஷிவா நிர்வாணா இயக்கிய குஷி படம் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ.70.23 கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story