அழகான மெலோடியாக உருவாகியுள்ள ‘என் ரோஜா நீ’... விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு !

விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளையொட்டி ‘குஷி’ படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவில் பிரபல நடிகராக இருக்கும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘குஷி’. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர். இந்து - முஸ்லீம் காதல் கதையை கொண்ட இப்படத்தை முன்னணி இயக்குனர் சிவ நிர்வணா இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். 'ஹ்ரிதயம்' படத்திற்கு இசையமைத்த ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய் தேவரகொண்டா பிறந்தநாளையொட்டி இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. ‘என் ரோஜா நீ’ என தொடங்கும் இந்த பாடலை மதன் கார்கி எழுதியுள்ளார். இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.