விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு அக்.,18-ம் தேதி வெளியீடு

விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு அக்.,18-ம் தேதி வெளியீடு

தெலுங்கில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா. கடந்த 2018-ஆம் ஆண்டு இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கீதா கோவிந்தம்’. இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இந்த கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. இந்த படத்திற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் படப்பூஜை நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்வில் விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர், தயாரிப்பாளர் தில் ராஜூ, இயக்குனர் பரசுராம் கலந்துக்கொண்டனர். 

விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு அக்.,18-ம் தேதி வெளியீடு

இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு வரும் 18-ம் தேதி அறிவிக்கப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. தலைப்புடன் டீசரும் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளதால், ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Share this story