‘குஷி’ படத்தின் கியூட் வீடியோவை பகிர்ந்த 'விஜய்' – வைரல் போஸ்ட்.

photo

சமந்தா-விஜய் தேவரகொண்டா இணைந்து நடிக்கும் காதல் ரொமான்டிக் படமான ‘குஷி’ திரைப்படத்தின் கியூட்டான விடியோ ஒன்றை நடிகர் விஜய் தேவரகொண்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

photo

குஷி திரைப்படம் கொரோனா காலத்திற்கு முன்பே தொடங்கப்பட்டு விட்டாலும் சில பல சிக்கல் காரணமாக சூட்டிங் தள்ளி சென்றது. தற்போது படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முன்னதாக விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ‘நா ரோஜா நுவே’ என்னும் படத்தின் முதல் வெளியானது. இந்த பாடல் தற்போது 9 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த நிலையில் பாடல்கள் மற்றும் படத்தின் காட்சி படப்பிடிப்பு சமயங்களில் சந்தாவுக்கே தெரியாமல் எடுக்கப்பட்ட கிளிப்புகளை இணைத்து ஒரு கியூட் கிளின்ஸ் வீடியோவாக தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் விஜய். இதனை ரசிகர்களும் ரசித்து அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். சமந்தா- விஜய் இந்த ஜோடி இதற்கு முன்னர் ‘மகாநதி’ திரைப்படத்தில் ஒன்றாக நடித்தனர், தற்போது இவர்கள் ஜோடிபோடும் இரண்டாவது படம் குஷி என்பது குறிப்பிடத்தக்கது.

A post shared by Vijay Deverakonda (@thedeverakonda)

Share this story