தெலுங்கில் தொடங்கிய ‘விநோதய சித்தம்’... படப்பிடிப்பு குறித்து முக்கிய அப்டேட்

samuthrakani

 தமிழில் சூப்பர் ஹிட்டடித்த ‘விநோதய சித்தம்’ படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. 

தமிழில் சமுத்திரகனி இயக்கிய நடித்து திரைப்படம் ‘விநோதய சித்தம்’. வித்தியாசமான கதைக்களத்தில் உருவான இப்படம் கடந்த 2021-ஆம் ஆண்டு நேரடியாக  ஜி5 ஓடிடித்தளத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. இந்த சமுத்திரகனி மற்றும் தம்பி இராமையா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 

samuthrakani

மேலும் இந்த படத்தில் முனிஸ்காந்த், சஞ்சிதா ஷெட்டி, ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்திருந்தனர். மனித வாழ்க்கையில் எல்லாம் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுடன் நாம் நல்ல மனதோடும் கருணையுடனும் வாழ வேண்டும் என்பதுதான் இப்படத்தின் செய்தி.  இந்த படத்தில் வழக்கமான காதல், அதிரடி சண்டைக்காட்சிகள் என எதுவும் இல்லாமல் இப்படம் உருவானது. 

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இந்த படம் தெலுங்கில் உருவாகிறது. சமுத்திரகனி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் பவன் கல்யாண், சமுத்திரகனி கதாபாத்திரத்திலும், நடிகர் சாய் தரம் தேஜ் தம்பி ராமையா கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

 

Share this story