சர்ச்சை இயக்குநரின் அடுத்த படம் ‘தி வேக்சின் வார்’- சம்பவத்திற்கு தயாராகும் விவேக் அக்னிஹோத்ரி.

photo

தி காஷ்மீர் ஃபைல்ஸ்என்ற படத்தின் மூலமாக சர்ச்சையைக் கிளப்பி இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தனது  அடுத்த படம் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார்.

தி வேக்சின் வார்என தனது புதிய படத்திற்கு பெயரிட்டுள்ளார், இந்த படத்தின் தலைப்பே கவனம் பெற்றுள்ளது.  விவேக் அக்னிஹோத்ரி  இயக்கத்தில் 1990ஆம் ஆண்டு பண்டிதர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு கடும் விமர்சனங்களை சந்தித்த திரைப்படம்தி காஷ்மீர் ஃபைல்ஸ்’; இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி பெரும் சர்ச்சைகளைக் கிளப்பினாலும் படம் நாடு முழுவதும் 340 கோடிக்கும் மேல் வசூலை வாரிக்குவித்தது.

photo

இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதோடு மட்டும் அல்லாமல் அதை மிகைப்படுத்தி எடுக்கப்பட்டதாகவும், இது ஒரு இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரம் என்றும் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் குவிந்தன.அது ஒரு புறம் , இருக்க மற்றொரு புறம்  பிரதமர் மோடி உள்பட பாஜகவினரின் பாராட்டுகளைப் பெற்றது. மேலும், பாஜக ஆளும் சில மாநிலங்களில் இப்படத்திற்கு வரிவிலக்கும் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

photo

இந்த நிலையில் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ‘தி வேக்சின் வார்என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதியான சுகந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது, அதாவது படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட 11 மொழிகளில்  வெளியாகவுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

​​​​

Share this story