Where is pushpa ?.. அட்டகாசமான ‘புஷ்பா 2’ கிளிம்ப்ஸ் வெளியீடு

Where is Pushpa

‘புஷ்பா 2‘ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. 

Where is Pushpa

 அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘புஷ்பா’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. செம்மர கடத்தலை மையமாக வைத்து உருவான இந்த படம் பல மொழிகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. சுமார் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து இப்படம் சாதனை படைத்தது. 

Where is Pushpa

இந்த படத்தில் அல்லு அர்ஜூனுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இருபாகங்களாக உருவாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இந்த படத்தின் முதல் பாகம் சூப்பர் ஹிட்டடித்ததால் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக உருவாகி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

Where is Pushpa

இநிலையில் ‘புஷ்பா 2‘ படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என  நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ‘Where is pushpa ?’ என்ற தலைப்பில் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘புஷ்பா எங்கே’ என்பதற்கான முழு விபரம் வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி மாலை 4.05 மணிக்கு அல்லு அர்ஜூனின் பிறந்தநாளையொட்டி வெளியாகும் என அறிவித்துள்ளனர். இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

Share this story