‘ஜெகன்மோகன் ரெட்டி’யாக மாறப்போகும் நடிகர் ‘ஜீவா’.

photo

கடந்த 2019ஆம் ஆண்டு ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய். எஸ் ராஜசேகர  ரெட்டியின் வாழ்கையை மையமாக வைத்து ‘யாத்ரா’ என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது. இயக்குநர் மஹி.வி ராகவ் இயக்கத்தில் தயாரான அந்த படம் கட்சிகாரர்களை தவிர பொதுமக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பதாகவும் அதை முதல்பாகத்தின் இயக்குநரே இயக்க போவதாகவும் சில நாட்களுக்கு முன்னர் தகவல் வெளியானது. அதுமட்டுமல்லாமல் படத்தில் ஓய். எஸ். ஆரின் மகனான ஜெகன் மோகன் ரெட்டி கதாபாத்திரமாக சூர்யா நடிப்பர் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் தற்போது சூர்யாவுக்கு பதில் நடிகர் ஜீவா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

photo

முதல் பாகத்தில் ஒய்.எஸ். ஆர் கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருந்தார். இரண்டாம் பாகத்தின் கதைகளமாக ஜெகம் மோகனின் சிறுவயது பருவம், பள்ளி, கல்லூரி, அரசியல் வாழ்வு என காட்டபட உள்ளதாம். படத்திற்காக ஜீவாவிற்கு ஐதராபாத்தில் போட்டோ ஷுட் நடத்தப்பட்டதாம். ஜீவாதான் நடிக்க உள்ளார் என்ற தகவலை அறிந்த பலருமே சரியான தேர்வு என பாராட்டி வருகின்றனர். விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story