யாத்ரா 2 படத்தின் முன்னோட்டம் வெளியீடு
1707047233035
மறைந்த முன்னாள் முதல்வர் ஒய். எஸ் ராஜசேகர ரெட்டியின் வாழ்கையை தழுவி எடுக்கப்பட்ட படம் ‘யாத்ரா’ இந்த படத்தில் ஒய்.எஸ். ஆர் கதாப்பாத்திரத்தில் நடிகர் மம்முட்டி நடித்திருப்பார். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. அதையும் முதல் பாகத்தை இயக்கிய மஹி வி ராகவ் இயக்கிவருகிறார். இந்த படத்தில் தற்போதைய ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கதாப்பாத்திரத்தில் நடிகர் ஜீவா நடித்து வருகிறார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், இப்படத்தின் முன்னோட்டம் படக்குழு தற்போது வௌியிட்டுள்ளது. மாறுபட்ட வேடத்தில் அசத்தலாக ஜீவா நடித்துள்ள இப்படத்தின் ட்ரைலர் சமூக வலைதளங்களில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.