நடிகர் ஜீவாவின் ‘யாத்ரா2’ பட அப்டேட்.
நடிகர் ஜீவா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கதாப்பாத்திரதில் நடித்துள்ள ‘யாத்ரா2’ படத்தின் ஃபஸ்ட்லுக் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ் ராஜசேகர ரெட்டியின் வாழ்கையை மைய்யமாக வைத்து எடுக்கப்பட்ட படம் ‘யாத்ரா’ இந்த படத்தில் முன்னாள் முதல்வராக மம்மூட்டி நடித்திருந்தார். தற்போது படத்தின் இரண்டாம் பாகம் ஒய்.எஸ்.ஆரின் மகனும் தற்போதைய ஆந்திர முதல்வரான ஜெகன் மோகன் ரெட்டியை மைய்யமாக வைத்து உருவாகி வருகிறது. அதில் ஜெகன் மோகன் ரெட்டியாக நடிகர் ஜீவா நடித்துள்ளார். இந்த நிலையில் ‘யாத்ரா2’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வந்துள்ளது. அதாவது படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர்ன் வரும் 9ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவித்து படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளனர். ஜீவாவின் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். முதல் பாகத்தை இயக்கிய மஹி வி ராகவ் தான் இந்த படத்தையும் இயக்க உள்ளார்.