‘யாத்ரா2’ திரைப்படம்- ஜீவாவின் ஃபஸ்ட் லுக் வெளியீடு.

photo

நடிகர் ஜீவா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ‘யாத்ரா2’ படத்தின் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

photo

மறைந்த முன்னாள் முதல்வர் ஒய். எஸ் ராஜசேகர ரெட்டியின் வாழ்கையை தழுவி எடுக்கப்பட்ட படம் ‘யாத்ரா’ இந்த படத்தில் ஒய்.எஸ். ஆர் கதாப்பாத்திரத்தில் நடிகர் மம்முட்டி நடித்திருப்பார். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. அதையும் முதல் பாகத்தை இயக்கிய மஹி வி ராகவ் இயக்கிவருகிறார். இந்த படத்தில் தற்போதைய ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கதாப்பாத்திரத்தில் நடிகர் ஜீவா நடித்து வருகிறார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

photo

இந்த நிலையில் தற்போது படத்திற்கான ஜீவாவின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் ஜீவா, மம்முட்டி இருவரின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. அதனுடம் படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி படம் வெளியாகும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Share this story