முதல் முறையாக மலையாளத்தில் அடியொடுத்து வைக்கும் ‘யோகிபாபு‘ – இருக்கும் தரமான சம்பவம் இருக்கு…..

photo

 மலையாளத்தில் பிரபல நடிகர், வில்லனாக நடிக்க உள்ள படத்தின் மூலமாக யோகிபாபு மலையாள சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

photo

கோலிவுட்டில் முன்னணி காமெடி  நடிகராக வலம்வரும் யோகிபாபு, பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் நகைச்சுவை வேடங்களை கடந்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் தமிழை கடந்து பிற மொழி படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார். உதாரணமாக அட்லீ- ஷாருக்கான் கூட்டணியில் தயாராகிவரும் ‘ஜவான்’ படத்தின் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். தற்போதைய தகவல் படி யோகிபாபு மலையாள திரையிலும் தோன்ற உள்ளார்.

photo

photo

அதாவது மலையாளத்தில் வெளியாகி வசூலை வாரி குவித்த படமான ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ பட இயக்குநர் விபின் தாஸ் இயகக்கவுள்ள ‘குருவாயூர் அம்பலநடையில்’ படத்தில் யோகிபாபு இணைந்துள்ளார்.இந்த படத்தில் வில்லனாக பிரபல நடிகர் பிரித்விராஜ் நடிக்க உள்ளார். படத்தின் கதாநாயகனாக ஜெய ஜெய ஜெய ஜெய ஹே படத்தில் நடித்த பசில் ஜோசப் தான் நடிக்க உள்ளார்.  இந்த தகவல் யோகிபாபு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this story