இளம் நடிகர் திடீரென தற்கொலை.. அதிர்ச்சியில் திரையுலகம் !

actor sudheer varma

 இளம் தெலுங்கு நடிகர் சுதீர் வர்மா, தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தெலுங்கு சினிமாவில் இளம் நடிகராக வலம் வந்தவர் சுதீர் வர்மா. சுவாமி ரா ரா, குண்டன பொம்மா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்த அவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வந்தது. அதனால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்த்து காத்திருந்தார்.

actor sudheer varma

ஆனால் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் சினிமாவில் கிடைக்கவில்லை. நீண்ட சினிமாவில் புதிய வாய்ப்புக்காக காத்திருந்த அவருக்கு எந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் சுதீர் வர்மா திடீரென இன்று தற்கொலை செய்துக்கொண்டார். 

விசாகப்பட்டினத்தில் உள்ள வீட்டில் இருந்த தற்கொலை செய்துக்கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இது தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து உடற்கூறு ஆய்வுக்காக அவரது உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவரது இறுதிச்சடங்குகள் நாளை விசாகப்பட்டிணத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


 

Share this story