‘உங்கள் அன்பு கனவுகளுக்கு அப்பாற்பட்டது’ - ‘சீதாராமம்’ ஓராண்டு நிறைவையொட்டி நடிகை மிருணாள் தாகூர் நெகிழ்ச்சி பதிவு !

Mrunal Thakur

‘சீதாராமம்’ படம் வெளியாகி ஓராண்டாகியுள்ள நிலையில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை நடிகை மிருணாள் தாகூர் பதிவிட்டுள்ளார். 

தென்னிந்திய சினிமாவில் இளைஞர்களின் மனம் கவர்ந்த நடிகையாக இருப்பவர் மிருணாள் தாகூர். அதற்கு காரணம் கடந்த ஆண்டு வெளியான ‘சீதா ராமம்’ திரைப்படம் தான். தெலுங்கில் உருவான இப்படம் தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக் செய்யபட்டு பான் இந்தியா திரைப்படமாக வெளியானது. 

இந்த படத்தில் ஹீரோவாக நடித்த மலையாள நடிகர் துல்கர் சல்மான், இராணுவ வீரராக நடித்திருந்தார். ஹீரோயினாக நடித்திருந்த நடிகை மிருணாள் தாகூர், இளவரசி நூர்ஜஹானாக நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். சீதா மகாலஷ்மி என்ற அந்த கதாபாத்திரம் இன்றைக்கு ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்துள்ளது. 

Mrunal Thakur

மாபெரும் வெற்றிப்பெற்ற இந்த படம் வெளியாகி ஓராண்டாகியுள்ள நிலையில் அதை கொண்டாடும் விதமாக ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட காட்சிகளின் தொகுப்பை நடிகை மிருணாள் தாகூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள அவர், தெலுங்கில் நான் அறிமுகமான முதல் திரைப்படம் ‘சீதா ராமம்’. நீங்கள் அனைவரும் என் மீது பொழிந்த அன்பு எனது கனவுகளுக்கு அப்பாற்பட்டது. 

நீங்கள் என்னை உங்கள் சொந்த தெலுங்கு பெண்ணாகவே ஏற்றுக் கொண்டீர்கள். மேலும் இந்த நம்ப முடியாத மற்றும் மறக்கமுடியாத காதல் பயணத்தை செய்ததற்கு நன்றி. மிகவும் சிறப்பானது. இன்றும் பல வருடங்களுக்கு வித்தியாசமான கதாபாத்திரங்கள் மூலம் உங்களை மகிழ்விப்பேன் என்று கூறியுள்ளார். 

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் மிருணாள் தாகூர். ‘சூப்பர் 30’, ‘லல் சோனியா’ உள்ளிட்ட சில இந்தி படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். ‘சீதாராமம்’ வெற்றிக்கு பிறகு இந்தி, தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளில் புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story