“தியேட்டர்ல பாக்க முடியாதுன்னு நினைக்கும் போது வருத்தமா இருக்கு”… டாப்ஸியின் பதிவிற்கு அக்ஷய் அளித்த பதில்!

“தியேட்டர்ல பாக்க முடியாதுன்னு நினைக்கும் போது வருத்தமா இருக்கு”… டாப்ஸியின் பதிவிற்கு அக்ஷய் அளித்த பதில்!

‘லட்சுமி பாம்ப் படத்தை தியேட்டரில் பார்க்கமுடியாததற்கு வருத்தம் தெரிவித்த டாப்ஸிக்கு அக்ஷய் குமார் பதிலளித்துள்ளார்.

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய காஞ்சனா தமிழில் மாபெரும் வெற்றி பெற்றது. பின்னர் ராகவா லாரன்ஸ் ஹிந்தியில் அக்ஷய் குமாரை வைத்து ‘லக்ஷ்மி பாம்ப்’ என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார். இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார்.

“தியேட்டர்ல பாக்க முடியாதுன்னு நினைக்கும் போது வருத்தமா இருக்கு”… டாப்ஸியின் பதிவிற்கு அக்ஷய் அளித்த பதில்!

தற்போது லக்ஷ்மி பாம்ப் திரைப்படம் நவம்பர் 9-ம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது. எல்லா நாடுகளிலும் ஓடிடி-யிலும் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் தியேட்டர் மற்றும் ஓடிடி-களில் சேர்ந்து வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. 80 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று இந்தப் படத்தின் ட்ரைலர் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. அதையடுத்து ரசிகர்கள், திரையுலகப் பிரபலங்கள் பலரும் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

“தியேட்டர்ல பாக்க முடியாதுன்னு நினைக்கும் போது வருத்தமா இருக்கு”… டாப்ஸியின் பதிவிற்கு அக்ஷய் அளித்த பதில்!

இந்நிலையில் நடிகை டாப்ஸி “மிகச் சிறப்பாக நடித்துள்ளீர்கள். ஆனால் இப்படத்தைத் திரையரங்கில் பார்க்க முடியாது என்று நினைக்கும்போது ஏமாற்றமாக உள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள அக்‌ஷய் குமார், “இது உங்களுக்கு மட்டும் அல்ல, படத்தை ரிலீஸ் செய்தாக ஆக வேண்டுமே? ட்ரைலர் மீது உங்கள் அன்புக்கு நன்றி” என்று பதிலளித்துள்ளார்.

Share this story