அடேங்கப்பா… ஆலியா பட் கூட வர்றவங்களுக்கே இவ்ளோ செலவா!?

அடேங்கப்பா… ஆலியா பட் கூட வர்றவங்களுக்கே இவ்ளோ செலவா!?

பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் தனிப்பட்ட ஊழியர்களின் செலவு மட்டுமே ஒரு நாளைக்கு .1 லட்சம் ஆவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘பாஹூபலி’ படத்துக்கு பிறகு ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் படம் ’ஆர்.ஆர்.ஆர்’ என்னும் பிரம்மாண்ட படத்தை ராஜமௌலி இயக்கிவருகிறார். ராமராஜுவாக நடிக்கும் ராம் சரண் பகுதியின் டீசர் மற்றும் கொமாரம் பீம் ஆக என்டிஆர் மின்னும் டீசர் என இரண்டும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

அடேங்கப்பா… ஆலியா பட் கூட வர்றவங்களுக்கே இவ்ளோ செலவா!?

இப்படத்தில் பாலிவுட் நடிகை ஆலியா பட் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நீண்ட நாட்கள் எதிர்பார்ப்பிற்கு பின்பு தற்போது ஆலியா ஆர்ஆர்ஆர் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் வந்துள்ளார்.

ஆர்.ஆர்.ஆர் தயாரிப்பாளர்கள் ஆலியாவின் தனிப்பட்ட ஊழியர்களுக்கு மட்டுமே அதிக பணம் செலவழிப்பதாகக் கூறப்படுகிறது. ஆலியா உடன் 10 தனிப்பட்ட ஊழியர்கள் ஹைதராபாத் வந்துள்ளனராம்.

அடேங்கப்பா… ஆலியா பட் கூட வர்றவங்களுக்கே இவ்ளோ செலவா!?

அவரது தனிப்பட்ட ஊழியர்களில் 4 பவுன்சர்கள், 1 மேக்கப் ஆர்ட்டிஸ்ட், 1 அசிஸ்டன்ட், 1 ஹேர்ஸ்டைலிஸ்ட் , 1 காஸ்டியூம் டிசைனர் மற்றும் மேனேஜர் ஒருவர், டிரைவர் என பத்து பேர் வந்துள்ளனராம்.

இவர்கள் அனைவரும் ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலில் தங்கியுள்ளனர். அவர்களின் ஊதியம், அவர்களின் உணவு மற்றும் தங்குவதற்கான செலவுகள் மட்டுமே ஒரு நாளைக்கு 1 லட்சம் என்று கூறப்படுகிறது.

அடேங்கப்பா… ஆலியா பட் கூட வர்றவங்களுக்கே இவ்ளோ செலவா!?

பாலிவுட் நடிகை என்றாலே இவ்வளவு செலவு ஆகும் என்று என்று தெரிந்தாலும் படத்திற்கு மிகப்பெரிய மார்க்கெட் கிடைக்கும் என்று தான் அவரை படத்தில் இணைத்துள்ளனர்.

Share this story