×

இணையத்தில் லீக் ஆன த்ரிஷ்யம் 2 ட்ரைலர்… அதிர்ச்சியில் படக்குழு!

மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள ‘த்ரிஷயம் 2’ படத்தின் ட்ரைலர் இணையத்தில் கசிந்தது படக்குழுவினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. த்ரிஷ்யம் 2 திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக உள்ளது. நேற்று த்ரிஷயம் 2 படத்தின் ட்ரைலர் வரும் பிப்ரவரி 8-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதையடுத்து திரிஷ்யம் 2 படம் பிப்ரவரி 19-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் படத்தின் ட்ரைலர் இணையத்தில் கசிந்துவிட்டது. அதை அறிந்த படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். எனவே ட்ரைலர்
 

மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள ‘த்ரிஷயம் 2’ படத்தின் ட்ரைலர் இணையத்தில் கசிந்தது படக்குழுவினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

த்ரிஷ்யம் 2 திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக உள்ளது. நேற்று த்ரிஷயம் 2 படத்தின் ட்ரைலர் வரும் பிப்ரவரி 8-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதையடுத்து திரிஷ்யம் 2 படம் பிப்ரவரி 19-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் படத்தின் ட்ரைலர் இணையத்தில் கசிந்துவிட்டது. அதை அறிந்த படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். எனவே ட்ரைலர் அறிவித்த தேதிக்கு முன்னரே வெளியிட அமேசான் ப்ரைம் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

த்ரிஷ்யம் 2 படத்திற்கு இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருவதால் இந்த ட்ரைலர் லீக் படத்தின் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.