மிரட்ட வரும் மோகன்லால்… ‘த்ரிஷ்யம் 2’ படத்தின் முக்கிய அப்டேட்!

மிரட்ட வரும் மோகன்லால்… ‘த்ரிஷ்யம் 2’ படத்தின் முக்கிய அப்டேட்!

மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள த்ரிஷயம் 2 படத்தின் ட்ரைலர் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. அதையடுத்து அப்படம் இந்தியாவின் பல மொழிகளில் ரீமேக் ஆனது. ரீமேக் செய்யப்பட்ட அத்தனை மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றன.

Image

பின்னர் ஏழு வருடங்களுக்குப் பிறகு அதே படக்குழு மீண்டும் இணைந்து திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியது. இப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது.

தற்போது த்ரிஷயம் 2 படத்தின் ட்ரைலர் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 8-ந்தேதி ட்ரைலர் வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர். அதோடு மோகன்லால் மிரட்டல் லுக் விடும் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். இப்படத்திற்கு இந்தியா முழுதும் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Share this story