×

ஆர்ஆர்ஆர் படத்தில் பட்டையைக் கிளப்பும் ஆக்ஷன் காட்சிகளைக் களமிறக்கும் ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர்!

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் படத்தின் இறுதிக்கட்ட ஆக்ஷன் காட்சிகளுக்காக ஹாலிவுட்டைச் சேர்ந்த ஸ்டண்ட் இயக்குனர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். ‘பாகுபலியை அடுத்து ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் படம் ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கி வருகிறார். இப்படம் அல்லுரி சிதாராமாஜு, கொமாராம் பீம் என்ற இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை அடிப்படையாக வைத்து உருவாகி வருகிறது. அல்லூரி ராமராஜுவாக ராம் சரணும், கொமாராம் பீம் ஆக ஜூனியர் என்டிஆரும் நடிக்கின்றனர். இப்படத்தில் ஆலியா பாட், அஜய்
 

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் படத்தின் இறுதிக்கட்ட ஆக்ஷன் காட்சிகளுக்காக ஹாலிவுட்டைச் சேர்ந்த ஸ்டண்ட் இயக்குனர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

‘பாகுபலியை அடுத்து ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் படம் ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கி வருகிறார். இப்படம் அல்லுரி சிதாராமாஜு, கொமாராம் பீம் என்ற இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை அடிப்படையாக வைத்து உருவாகி வருகிறது.

அல்லூரி ராமராஜுவாக ராம் சரணும், கொமாராம் பீம் ஆக ஜூனியர் என்டிஆரும் நடிக்கின்றனர். இப்படத்தில் ஆலியா பாட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தற்போது படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றது. ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியப் பங்கு இருப்பதால் ஹாலிவுட்டைச் சேர்ந்த ஸ்டண்ட் இயக்குனர் நிக் போவெல் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். எக்ஸ் மென், வார், ரெசிடண்ட் ஈவில் போன்ற ஹாலிவுட் படங்களுக்கும், எந்திரன் 2, மணிகர்ணிகா உள்ளிட்ட இந்தியப் படங்களுக்கும் இவர் சண்டை வடிவமைப்பு செய்துள்ளார். பிரபாஸின் ராதே ஷியாம் படத்திலும் இவர் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது நிக் போவெல் ஆர்ஆர்ஆர் படத்தில் இணைந்துள்ளதால் படத்தில் மிரட்டலான அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வருடம் அக்டோபர் 13-ம் தேதி தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் இப்படம் வெளியாகவிருக்கிறது.