‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் கொமாராம் பீமாக நடிக்கும் ஜூனியர் என்டிஆரின் மிரட்டல் டீசர் வெளியாகியுள்ளது!

‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் கொமாராம் பீமாக நடிக்கும் ஜூனியர் என்டிஆரின் மிரட்டல் டீசர் வெளியாகியுள்ளது!

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் படத்தின் ஜூனியர் என்டிஆரின் டீசர் வெளியாகியுள்ளது.

‘பாகுபலி’ படத்துக்கு பிறகு ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் படம் ’ஆர்.ஆர்.ஆர்’. அல்லுரி சிதாராமாஜு, கொமாராம் பீம் என்ற இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை அடிப்படையாக வைத்து உருவாகி வருகிறது.

‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் கொமாராம் பீமாக நடிக்கும் ஜூனியர் என்டிஆரின் மிரட்டல் டீசர் வெளியாகியுள்ளது!

முதலில் ராமராஜுவாக நடிக்கும் ராம் சரண் பகுதியின் டீசர் வெளியாகியது. அந்த டீசருக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

தற்போது தற்போது கொமாரம் பீம் ஆக என்டிஆர் மின்னும் டீசர் வெளியாகியுள்ளது. எல்லோரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்து ரசிகர்களை ஆச்சர்யப்பட வைக்கும் வகையிலேயே அந்தத் தோற்றம் உள்ளது.

இயக்குநர் ராஜமவுலி, தற்போது ராம் சரண், என்டிஆருடன் இணைந்து ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் விறுவிறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார். கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பெரும் இடைவேளைக்குப் பின்னர், அத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடனும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் கொமாராம் பீமாக நடிக்கும் ஜூனியர் என்டிஆரின் மிரட்டல் டீசர் வெளியாகியுள்ளது!

இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ஆலியா பட் நவம்பர் மாதம் படப்பிடிப்பில் இணைய உள்ளார். அஜய் தேவ்கன் மற்றும் ஒலிவியா மோரிஸ் உள்ளிட்ட மீதமுள்ள நடிகர்கள் வரவிருக்கும் தேதிகளில் படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளனர்.

2021-ம் ஆண்டு இப்படம் வெளியாக உள்ளது. இப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பல இந்திய மொழிகளில் வெளியாக இருக்கிறது.

ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ரூ .450 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

Share this story