×

கொரோனா காரணமாக திருமணத்தைத் தள்ளிவைக்கும் தனுஷ் பட நடிகை!?

நடிகை மெஹ்ரீன் பிர்சாடாவின் திருமணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நடிகை மெஹ்ரீன் கார் பிர்சாடாவுக்கு அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதியின் மகன் பவ்யா பிஷ்னோ என்பவர் உடன் திருமணம் நிச்சயம் ஆனது. இவர் அரியானா மாநில முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரன் ஆவார். இருவரும் காதலித்து வந்தனர். பின்னர் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த ஆண்டு இறுதியில் இந்த ஜோடி திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் இப்போது, கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக
 

நடிகை மெஹ்ரீன் பிர்சாடாவின் திருமணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நடிகை மெஹ்ரீன் கார் பிர்சாடாவுக்கு அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதியின் மகன் பவ்யா பிஷ்னோ என்பவர் உடன் திருமணம் நிச்சயம் ஆனது. இவர் அரியானா மாநில முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரன் ஆவார். இருவரும் காதலித்து வந்தனர். பின்னர் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இந்த ஆண்டு இறுதியில் இந்த ஜோடி திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் இப்போது, கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக திருமணம் தள்ளி வைக்கப்படலாம் என்று மெஹ்ரீன் தெரிவித்துள்ளார்.

மெஹ்ரீன் மற்றும் அவரது அம்மா இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் இருவரும் தனிமையில் உள்ளனர். கொரோனா சூழலில் திருமணம் வைப்பது பாதுகாப்பாக இருக்காது என்பதால் தங்கள் திருமணம் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மெஹ்ரீன் தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். முக்கியமாக தனுஷுக்கு ஜோடியாக பட்டாஸ் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.