×

த்ரில்லரில் அதிரடி காட்டும் ‘நிழல்’… நயன்தாரா பட டிரெய்லர் வெளியீடு…

நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள ‘நிழல்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிசியாக உள்ள நடிகை நயன்தாரா. இவர் தற்போது ரஜினியுடன் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா ஏற்கனவே மலையாளத்தில் நடித்து வெளிவர காத்துக்கொண்டிருக்கும் படம் ‘நிழல்’. இந்த படத்தில் ஹீரோவாக நடிகர் குஞ்சாக்கோ போபன் நடித்துள்ளார். எடிட்டர் என் பட்டாதிரி இயக்கியுள்ள இப்படத்தில் சூரஜ் இசையமைத்துள்ளார். ஒரு குழந்தையை வைத்து த்ரில்லராக இந்த படம் உருவாகியுள்ளது. ஆண்டோ ஜோசப் தயாரித்துள்ள இப்படத்திற்கு
 

நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள ‘நிழல்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிசியாக உள்ள நடிகை நயன்தாரா. இவர் தற்போது ரஜினியுடன் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா ஏற்கனவே மலையாளத்தில் நடித்து வெளிவர காத்துக்கொண்டிருக்கும் படம் ‘நிழல்’. இந்த படத்தில் ஹீரோவாக நடிகர் குஞ்சாக்கோ போபன் நடித்துள்ளார். எடிட்டர் என் பட்டாதிரி இயக்கியுள்ள இப்படத்தில் சூரஜ் இசையமைத்துள்ளார்.

ஒரு குழந்தையை வைத்து த்ரில்லராக இந்த படம் உருவாகியுள்ளது. ஆண்டோ ஜோசப் தயாரித்துள்ள இப்படத்திற்கு தீபக் மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

‘நிழல்’ படம் வரும் ஏப்ரல் 4ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது. நயன்தாரா – குஞ்சாக்கோ இணைந்து நடித்துள்ள இப்படத்திற்கு எதிர்ப்பார்ப்பு அதிகம் உள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. த்ரில்லரில் கலக்கும் இந்த டிரெய்லருக்கு நல்ல வரவேற்பு உள்ளது.