மலையாள த்ரில்லர் படத்தில் நயன்தாரா… ‘நிழல்’ படத்தின் ரிலீஸ் எப்போது ?

மலையாள த்ரில்லர் படத்தில் நயன்தாரா… ‘நிழல்’ படத்தின் ரிலீஸ் எப்போது ?

மலையாளத்தில் நயன்தாரா நடித்து வெளியாக உள்ள நிழல் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மலையாள த்ரில்லர் படத்தில் நயன்தாரா… ‘நிழல்’ படத்தின் ரிலீஸ் எப்போது ?

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, ‘அண்ணாத்த’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து மலையாளத்தில் அவர் நடித்து வெளிவரவிருக்கிற‌ படம் ‘நிழல்’. இதில் ஹீரோவாக நடிகர் குஞ்சாக்கோ போபன் நடித்து வருகிறார். இந்தப் படத்தை கேரளா அரசின் மாநில விருது வென்ற எடிட்டர் என் பட்டாதிரி இயக்குகியுள்ளார்.

மலையாள த்ரில்லர் படத்தில் நயன்தாரா… ‘நிழல்’ படத்தின் ரிலீஸ் எப்போது ?

த்ரில்லர் ஜேர்னரில் உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ‘நிழல்’ படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த திரைப்படம் ஏப்ரல் 2வது வாரத்தில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

மலையாள த்ரில்லர் படத்தில் நயன்தாரா… ‘நிழல்’ படத்தின் ரிலீஸ் எப்போது ?

கொரானா காரணமாக கேரளாவில் திரையரங்குகள் மூடிக்கிடந்தன. இதையடுத்து கடந்த ஜனவரி மாத இறுதியில்தான் திரையரங்குகள் திறக்கப்பட்டன. ஆனால் இரவு காட்சிகளுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இரவு காட்சிக்கு அனுமதிக்கப்பட்டால் ஏப்ரல் 2வது வாரத்தில் உறுதியாக ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

Share this story