×

பிரபாஸின் பிரம்மாண்ட படத்தில் இணைந்த பிரபல நடிகர்…

பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ படத்தில் பிரபல கன்னட நடிகர் சுதீப் இணைந்துள்ளார். 3டி டெக்னாலஜியில் பிரம்மாண்டமாக உருவாகிறது ‘ஆதிபுருஷ்’. முழுக்க முழுக்க கிராபிக்ஸ் தொழிற்நுட்பமே இந்த படத்தில் பிரதானமாக இருக்கும். தெலுங்கு, இந்தியில் உருவாகும் இப்படம் டப் செய்யப்பட்டு தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மற்ற மொழிகளில் வெளியாகிறது. சுமார் 400 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தை டி.சீரிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் மும்பையில் கடந்த 60 நாட்களாக நடைபெற்றது. கொரானா 2வது அலை காரணமாக
 

பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ படத்தில் பிரபல கன்னட நடிகர் சுதீப் இணைந்துள்ளார்.

3டி டெக்னாலஜியில் பிரம்மாண்டமாக உருவாகிறது ‘ஆதிபுருஷ்’. முழுக்க முழுக்க கிராபிக்ஸ் தொழிற்நுட்பமே இந்த படத்தில் பிரதானமாக இருக்கும். தெலுங்கு, இந்தியில் உருவாகும் இப்படம் டப் செய்யப்பட்டு தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மற்ற மொழிகளில் வெளியாகிறது. சுமார் 400 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தை டி.சீரிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் மும்பையில் கடந்த 60 நாட்களாக நடைபெற்றது. கொரானா 2வது அலை காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங்கை படக்குழுவினர் நிறுத்தினர். கொரானா தாக்கம் குறைவதை பார்த்து மீண்டும் இந்த படத்தின் ஷூட்டிங்கை ஜூன் மாதத்தில் தொடங்கலாம் என திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தை முழுக்க முழுக்க கிராபிக்ஸ் தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி எடுக்க இருப்பதால், அதற்காக ஐதாரபாத்தில் பெரிய கிரீன் மேட் ஸ்டுடியோக்களை அமைத்துள்ளனர்.

இந்த படத்தில் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்திலும், பாலிவுட் நடிகர் சைப் அலி கான் வில்லன் கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளனர். இந்நிலையில் இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சுதீப் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் இந்த படத்தில் விபீஷணனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. இந்த படத்தை 2022ம் ஆண்டு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.