×

கேஜிஎஃப் இயக்குனர்- பிரபாஸ் கூட்டணியின் பிரம்மாண்டம்… ‘சலார்’ ரிலீஸ் அப்டேட்!

இயக்குனர் பிரசாந்த் நீல் பிரபாஸுடன் கூட்டணியில் உருவாகி வரும் சலார் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவிலான நடிகராக உருவெடுத்துள்ள பிரபாஸ் தற்போது ராதே ஷியாம் படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தை அடுத்து கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் உடன் சலார் என்ற பிரம்மாண்டப் படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்றது. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த சலார் படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட் வெளியாகியுள்ளது. சலார் திரைப்படம்
 

இயக்குனர் பிரசாந்த் நீல் பிரபாஸுடன் கூட்டணியில் உருவாகி வரும் சலார் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அளவிலான நடிகராக உருவெடுத்துள்ள பிரபாஸ் தற்போது ராதே ஷியாம் படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தை அடுத்து கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் உடன் சலார் என்ற பிரம்மாண்டப் படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்றது.


நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த சலார் படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட் வெளியாகியுள்ளது. சலார் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாகவிருக்கிறது.

இப்படத்தில் நடிகை ஷ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். பிரபல கன்னட நடிகரான மது குருசாமி சலார் படத்தில் வில்லனாக நடிக்கிறார். கேஜிஎப் இயக்குனர் மற்றும் பாஹுபலி நடிகரின் கூட்டணி என்பதால் படத்திற்கு இமாலய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.