×

காதலர் தினத்தன்று வெளியாகும் காதல் காவியத்தின் டீசர்.!

பிரபாஸ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் ராதே ஷியாம் படத்தின் டீசர் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பாஹூபலி படத்திற்குப் பிறகு இந்தியா மட்டுமல்ல உலகளவில் பிரபலமான நடிகராக பிரபாஸ் உருவெடுத்துள்ளார். இந்திய அளவில் பிரபாஸ் பல ரசிகர்களை பெற்றுள்ளதால் அவரின் படங்களுக்கு பெரிய மார்க்கெட் இருக்கிறது. எனவே அவர் தற்போது நடித்து வரும் படங்கள் அனைத்தும் 400 கோடி, 500 கோடி என ஹாலிவுட் தரத்திலான பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வருகின்றன. தற்போது பிரபாஸ் ராதா கிருஷ்ணகுமார்
 

பிரபாஸ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் ராதே ஷியாம் படத்தின் டீசர் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஹூபலி படத்திற்குப் பிறகு இந்தியா மட்டுமல்ல உலகளவில் பிரபலமான நடிகராக பிரபாஸ் உருவெடுத்துள்ளார். இந்திய அளவில் பிரபாஸ் பல ரசிகர்களை பெற்றுள்ளதால் அவரின் படங்களுக்கு பெரிய மார்க்கெட் இருக்கிறது. எனவே அவர் தற்போது நடித்து வரும் படங்கள் அனைத்தும் 400 கோடி, 500 கோடி என ஹாலிவுட் தரத்திலான பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வருகின்றன.

தற்போது பிரபாஸ் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ராதே ஷ்யாம் (Radhe Shyam) படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஐரோப்பாவில் நடக்கும் முந்தைய காலத்தைச் சேர்ந்த காதல் கதையாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் பூஜா ஹேக்டே கதாநாயகியாக நடிக்கிறார். இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் ராதே ஷ்யாம் படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

ராதே ஷியாம் படத்திலிருந்து வெளியான அப்டேட்கள் மக்களிடத்தில் பெரிய வரவேற்பைப் பெற்றன. தற்போது ராதே ஷியாம் படத்தின் டீசர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 14-ம் தேதி அதாவது காதலர் தினத்தில் இந்தக் காதல் காவியத்தின் டீசர் வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளனர்.