ராதே ஷ்யாம் படத்தில் பிரபாஸின் செம ஸ்டைலிஷ் லுக்… வெளியான ஸ்பெஷல் போஸ்டர்!

ராதே ஷ்யாம் படத்தில் பிரபாஸின் செம ஸ்டைலிஷ் லுக்… வெளியான ஸ்பெஷல் போஸ்டர்!

நடிகர் பிரபாஸ் வரும் 23-ம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாட உள்ளார். அதை முன்னிட்டு ‘ராதே ஷ்யாம்’ படக்குழுவினர் சிறப்பு போஸ்டர் வெளியிட்டு அவருக்கு அட்வான்ஸாக பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

நடிகர் பிரபாஸ், பாஹூபலி படத்திற்குப் பிறகு இந்தியா மட்டுமல்ல உலகளவில் பிரபலமான நடிகராக மாறியுள்ளார். பாஹுபலி படத்திற்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் படங்களுக்கு வானளாவிய எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. 400 கோடி, 500 கோடி என ஹாலிவுட் தரத்திலான படங்கள் வரிசையாக வந்து கொண்டிருக்கின்றன.

ராதே ஷ்யாம் படத்தில் பிரபாஸின் செம ஸ்டைலிஷ் லுக்… வெளியான ஸ்பெஷல் போஸ்டர்!

அந்த பிரம்மாண்ட வரிசையில் ராதா கிருஷ்ணகுமார் என்பவரின் இயக்கத்தில் ராதே ஷ்யாம் (Radhe Shyam) படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். இப்படம் ஐரோப்பாவில் நடக்கும் முந்தைய காலத்தைச் சேர்ந்த காதல் கதையாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் பூஜா ஹேக்டே கதாநாயகியாக நடிக்கிறார். இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் ராதே ஷ்யாம் படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு பூஜா ஹெக்டே பிறந்தநாளை முன்னிட்டு ராதே ஷ்யாம் படக்குழு அவருக்காக சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

ராதே ஷ்யாம் படத்தில் பிரபாஸின் செம ஸ்டைலிஷ் லுக்… வெளியான ஸ்பெஷல் போஸ்டர்!

அதேபோல் வரும் 23-ம் தேதி பிரபாஸ் தனது பிறந்தநாளைக் கொண்டாட உள்ளார். அதையடுத்து ராதே ஷியாம் படக்குழு ஸ்பெஷல் போஸ்டர் வெளியிட்டு பிரபாஸுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த போஸ்டரில் பிரபாஸ் ஒரு காரில் அமர்ந்திருப்பது போல் உள்ளது. மேலும் அந்தப் படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் விக்ரம்ஆதித்யா என்பதையும் வெளிப்படுத்தியுள்ளனர்.


ராதே ஷ்யாம் படத்தில் பிரபாஸின் செம ஸ்டைலிஷ் லுக்… வெளியான ஸ்பெஷல் போஸ்டர்!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ராதே ஷியாமின் படப்பிடிப்பு தற்போது இத்தாலியில் நடந்து வருகிறது. பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் படப்பிடிப்பில் பங்கேற்கின்றனர். இதற்கிடையில், பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 23 ஆம் தேதி ராதே ஷியாம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட உள்ளது.

Share this story