×

விஜய் சேதுபதி பட நடிகைக்கு அடித்த அதிர்ஷ்டம்… குவியும் படங்கள்!

விஜய் சேதுபதி வில்லனாக நடித்த உப்பேனா படத்தில் நடித்த க்ரித்தி ஷெட்டிக்கு பல பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளனர். தற்போது இயக்குனர் லிங்குசாமி இயக்கவிருக்கும் தெலுங்கு படத்தில் நடிகை க்ரித்தி ஷெட்டி இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். தமிழில் பிரபல இயக்குனராக வலம் வந்துகொண்டிருக்கும் லிங்குசாமி தற்போது தெலுங்கில் புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கவுள்ளார். தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் இந்த படம்
 

விஜய் சேதுபதி வில்லனாக நடித்த உப்பேனா படத்தில் நடித்த க்ரித்தி ஷெட்டிக்கு பல பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளனர். தற்போது இயக்குனர் லிங்குசாமி இயக்கவிருக்கும் தெலுங்கு படத்தில் நடிகை க்ரித்தி ஷெட்டி இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

தமிழில் பிரபல இயக்குனராக வலம் வந்துகொண்டிருக்கும் லிங்குசாமி தற்போது தெலுங்கில் புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கவுள்ளார். தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் இந்த படம் உருவாக உள்ளது.

தற்போது இந்தப் படத்தில் நடிகை க்ரித்தி ஷெட்டி இணைந்துள்ளளதாக அறிவித்துள்ளனர். இவர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வெளியாகி ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற ‘உப்பேனா’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அந்தப் படத்திற்குப் பிறகு க்ரித்தி ஷெட்டிக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது ராம் பொத்தினேனி படத்தில் இணைந்துள்ளதால் மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.

தெலுங்கு அல்லாத பிற மொழிகளிலும் பல பட வாய்ப்புகள் இவருக்கு குவிந்து வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.