×

“படத்தைத் திருட்டுத்தனமாக பார்த்தால் உங்களுக்கு தான் பிரச்சனை”… எச்சரிக்கும் சல்மான் கான்!

நடிகர் சல்மான் கான் தனது நடிப்பில் வெளியான ராதே படம் இணையத்தில் கசிந்ததை அடுத்து சல்மான் கான் சட்டவிரோதமாக படத்தைப் பார்ப்பவர்களை எச்சரித்துள்ளார். பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள ராதே திரைப்படம் கடந்த மே 13-ம் தேதி இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளில் திரையரங்கில், அதே நேரத்தில் ZEEPLEX ஓடிடி தளத்திலும் வெளியாகியது. அதில் Pay per View முறையில் பணம் செலுத்தி பார்க்குமாறு வெளியாகியிருந்தது. படம் வெளியான ஒரு சில நிமிடங்களிலேயே இணையத்தில்
 

நடிகர் சல்மான் கான் தனது நடிப்பில் வெளியான ராதே படம் இணையத்தில் கசிந்ததை அடுத்து சல்மான் கான் சட்டவிரோதமாக படத்தைப் பார்ப்பவர்களை எச்சரித்துள்ளார்.

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள ராதே திரைப்படம் கடந்த மே 13-ம் தேதி இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளில் திரையரங்கில், அதே நேரத்தில் ZEEPLEX ஓடிடி தளத்திலும் வெளியாகியது. அதில் Pay per View முறையில் பணம் செலுத்தி பார்க்குமாறு வெளியாகியிருந்தது.

படம் வெளியான ஒரு சில நிமிடங்களிலேயே இணையத்தில் கசிந்தது. படத்தை அதிக பேர் இணையத்தில் சட்டவிரோதமாக டவுன்லோட் செய்து பார்க்க ஆரம்பித்தனர். இது படக்குழுவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது நடிகர் சல்மான் கான் இப்படி சட்டவிரோதமாக டவுன்லோட் செய்து பார்ப்பவர்களை எச்சரித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“249 ரூபாய் என்ற நியாயமான விலையில் எங்கள் படம் ராதேவை நாங்கள் உங்களுக்கு வழங்கியுள்ளோம். ஆனால் ராதே படம் சட்டவிரோதமாக டவுன்லோட் செய்து பார்க்கப்படுகிறது. இது ஒரு தீவிரமான மோசடி. சைபர் செல் இந்த சட்டவிரோத இணைய தளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறது. நீங்களும் இந்த பைரைஸியில் ஈடுபடவேண்டாம். அப்படி செய்தால் உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும். மேலும் அது உங்களுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.