×

“எச்சில் ஊறவைக்கும் உணவுகளை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி”… தனுஷ் குறித்து பாலிவுட் நடிகை நெகிழ்ச்சிப் பதிவு!

தனுஷ் மற்றும் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி வந்த ‘அட்ராங்கி ரே’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து நடிகை சாரா அலி கான் தனுஷ் பற்றி நெகிழ்ச்சிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தனுஷ் தற்போது சர்வதேச நடிகராக உருவெடுத்துள்ளார். ‘கிரே மேன்’ படத்திற்காக தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். அதைத் தவிர ஏராளமான தமிழ் படங்களையும் கைவசம் வைத்துள்ளார் தனுஷ். இதற்கு முன்னர், ராஞ்சனா படைத்தை இயக்கிய ஆனந்த எல் ராய் இயக்கத்தில் ‘அட்ரங்கி ரே‘ படத்தில் நடித்து
 

தனுஷ் மற்றும் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி வந்த ‘அட்ராங்கி ரே’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து நடிகை சாரா அலி கான் தனுஷ் பற்றி நெகிழ்ச்சிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தனுஷ் தற்போது சர்வதேச நடிகராக உருவெடுத்துள்ளார். ‘கிரே மேன்’ படத்திற்காக தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். அதைத் தவிர ஏராளமான தமிழ் படங்களையும் கைவசம் வைத்துள்ளார் தனுஷ்.

இதற்கு முன்னர், ராஞ்சனா படைத்தை இயக்கிய ஆனந்த எல் ராய் இயக்கத்தில் ‘அட்ரங்கி ரே‘ படத்தில் நடித்து வந்தார். அந்தப் படத்தில் அக்ஷய் குமார் மற்றும் சாரா அலி கான் இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வந்தனர்.

தற்போது அந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அந்தப் படத்தின் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்ட சாரா அலி கான் “எப்போதும் உதவியாகவும், ஊக்கமளித்ததற்கும் நன்றி. உங்களை விட சிறந்த நடிகராக வேறு யாரும் இருந்திருக்க முடியாது. ஆம், உங்கள் அற்புதமான இசை மற்றும் எச்சில் ஊறவைக்கும் தென்னிந்திய உணவு வகைகளை எனக்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.” என்று தெரிவித்துள்ளார்.