×

பிரான்ஸ் நாட்டிலிருந்து ஆக்ஸிஜன் ஆலைகளை வரவழைக்கும் சோனு சூட்!

திரைப்படங்களில் வில்லனாக மிரட்டி வந்த சோனு சூட் ஊரடங்கு காலத்தில் ஏராளமான மக்களுக்கு உதவி செய்து நிஜ வாழ்வின் ஹீரோவாக மாறினார். தற்போதும் தொடர்ந்து உதவிகள் பல செய்து வருகிறார். தற்போது ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் பல்வேறு அமைப்புகளுக்கு அளித்து உதவி வருகிறார். இப்போது இந்தியாவில் பல்வேறு இடங்களில் ஆக்ஸிஜன் ஆலைகளை நிறுவ பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளிலிருந்து உபகரணங்களை வரவழைப்பதற்கான முயற்சிகளில் சோனு சூட் ஈடுபட்டுள்ளார். இந்தியாவில் கொரோனாவின்
 

திரைப்படங்களில் வில்லனாக மிரட்டி வந்த சோனு சூட் ஊரடங்கு காலத்தில் ஏராளமான மக்களுக்கு உதவி செய்து நிஜ வாழ்வின் ஹீரோவாக மாறினார். தற்போதும் தொடர்ந்து உதவிகள் பல செய்து வருகிறார்.

தற்போது ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் பல்வேறு அமைப்புகளுக்கு அளித்து உதவி வருகிறார். இப்போது இந்தியாவில் பல்வேறு இடங்களில் ஆக்ஸிஜன் ஆலைகளை நிறுவ பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளிலிருந்து உபகரணங்களை வரவழைப்பதற்கான முயற்சிகளில் சோனு சூட் ஈடுபட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் மூன்றாவது அலை ஏற்பட்டால் அதைச் சமாளிப்பதற்கு எதுவாக இருக்கும் வகையில் சோனு சூட் இந்த ஆக்ஸிஜன் ஆலைகளை நிறுவ முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது. குறைந்தது 4 ஆக்சிஜன் ஆலைகள் நிறுவ வேண்டும் என்ற முயற்சியில் சோனு சூட் ஈடுபட்டுள்ளார்.

“நாங்கள் தேவைப்படும் மக்களுக்கு ஆக்ஸிஜன் ஆலைகளை கொண்டு வருகிறோம். ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கிடைக்காததால் ஏராளமானோர் கஷ்டப்படுவதை நாங்கள் பார்த்திருக்கிறோம். நாங்கள் இப்போது அதைப் பெற்றுள்ளோம், ஏற்கனவே மக்களுக்கு வழங்கியுள்ளோம். இருப்பினும், இந்த ஆக்ஸிஜன் ஆலைகள் முழு மருத்துவமனைகளுக்கும் சப்ளை செய்யாது, ஆனால் இங்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் நிரப்பப்படும், இது கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் பெரும் பிரச்சினையை தீர்க்கும் ”என்று சோனு சூட் தெரிவித்துள்ளார்.

முதல் ஆலை ஏற்கனவே ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும், அது பிரான்சிலிருந்து 10 – 12 நாட்களில் வந்து சேரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.