×

ட்விட்டரில் அதகளம் செய்யும் ப்ரியா பவானி ஷங்கர்… கேள்விகளுக்கு ‘நறுக்’ பதில்கள்!

ட்விட்டரில் ப்ரியா பவானி ஷங்கர் அளித்து வரும் பதில்கள் கவனம் பெற்று வருகிறது. நடிகை ப்ரியா பவானி ஷங்கர் தற்போது ட்விட்டரில் அளித்து வரும் பதில்கள் தான் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நறுக் நறுக் பதில்கள் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. 2018-ம் ஆண்டு ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட பதிவை மேற்கோள் காட்டிய ஒருவர் “அடடே மேடம் நீங்களே திருட்டு திராவிட சொம்பு தான?” என்று தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்த ப்ரியா பவானி
 

ட்விட்டரில் ப்ரியா பவானி ஷங்கர் அளித்து வரும் பதில்கள் கவனம் பெற்று வருகிறது.

நடிகை ப்ரியா பவானி ஷங்கர் தற்போது ட்விட்டரில் அளித்து வரும் பதில்கள் தான் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நறுக் நறுக் பதில்கள் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

2018-ம் ஆண்டு ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட பதிவை மேற்கோள் காட்டிய ஒருவர் “அடடே மேடம் நீங்களே திருட்டு திராவிட சொம்பு தான?” என்று தெரிவித்திருந்தார்.

அதற்கு பதிலளித்த ப்ரியா பவானி ஷங்கர் “This cracked me up. பெரிய CID.. ஏதோ தேடி கண்டுபிடிச்ச மாதிரி இதுல என்ன பெருமை? என் timeline la இன்னும் தானே இருக்கு? 4 வருஷம் journalista இருந்திருக்கேன். என் வேலையே அதுதான்ன்னும் நிறைய எழுதிருக்கேன். நன்கு தேடவும்” என்று தெரிவித்துள்ளார்.

மற்றொருவர் “மேடம் இன்னும் 5 வருஷத்துல redgiantmovies, sun pictures, cloud nine movies இதர பிற தயாரிப்பு நிறுவனங்களில் நடிக்கணும்ல பதறத்தானே செய்வாங்க” என்று கமெண்ட் அடித்திருந்தார்.

அதற்கு பதிலளித்த ப்ரியா “ஆமாங்க ஐயா. ஒரே பதட்டமா இருக்கு. முதல்வர் ஆகிட்டீங்க வாழ்த்துகள்னு சொன்னா நாலஞ்சு கம்பெனில பட வாய்ப்பு தர்றதா உங்கள மாதிரி விவரம் தெரிஞ்சவங்க சொன்னாங்க. அதான் வாய்ப்பு தேடி ட்வீட் போட்டுகிட்டு இருக்கேன். என்ன ஒரு strategy இல்ல” என்று பதிலளித்துள்ளார். ப்ரியா பவானி சங்கரின் இந்தப் பதில்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.