×

உதயநிதி படத்தில் இணைந்த தன்யா ரவிச்சந்திரன்!

நடிகை தன்யா ரவிச்சந்திரன் உதயநிதி நடிக்கும் புதிய படத்தில் இணைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. நடிகை தன்யா ரவிச்சந்திரன் தமிழில் ‘பலே வெள்ளையத்தேவா’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதையடுத்து அருள்நிதி நடித்த ‘பிருந்தாவனம்’ படத்தில் நடித்தார். விஜய் சேதுபதியுடன் ‘கருப்பன்’ படம் இவருக்கு அதிக ரசிகர்களைச் சம்பாதித்துக் கொடுத்தது. தன்யா, கடைசியாக ‘சுந்தரபாண்டியன்’ பட இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வந்தார். இந்நிலையில், தற்போது உதயநிதி நடிக்கும் புதிய படத்தில் தன்யா இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உதயநிதி
 

நடிகை தன்யா ரவிச்சந்திரன் உதயநிதி நடிக்கும் புதிய படத்தில் இணைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகை தன்யா ரவிச்சந்திரன் தமிழில் ‘பலே வெள்ளையத்தேவா’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதையடுத்து அருள்நிதி நடித்த ‘பிருந்தாவனம்’ படத்தில் நடித்தார். விஜய் சேதுபதியுடன் ‘கருப்பன்’ படம் இவருக்கு அதிக ரசிகர்களைச் சம்பாதித்துக் கொடுத்தது.

தன்யா, கடைசியாக ‘சுந்தரபாண்டியன்’ பட இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வந்தார். இந்நிலையில், தற்போது உதயநிதி நடிக்கும் புதிய படத்தில் தன்யா இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உதயநிதி தற்போது பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான ‘ஆர்டிகிள் 15’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளார். அந்தப் படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். நடிகை தன்யா ஹோப் இந்தப் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடிக்கிறார். தன்யா ரவிச்சந்திரன் இந்தப் படத்தில் பத்திரிகையாளராக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.