×

மீண்டும் இந்த இயக்குநரா? அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போவது இவர் தானாம்!

நடிகர் அஜித் இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் மூன்றாவதாகவும் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. ‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான எச் வினோத் தனது முதல் படத்திலியே தமிழ் சினிமாவின் நம்பிக்கை இயக்குனராக அறியப்பட்டார். அதே போல கார்த்தியை வைத்து ‘தீரன் அதிகாரம் படம்’ இயக்கி அனைவைரையும் ஆச்சர்யப்பட வைத்தார். வினோத்தின் திறைமையைப் பார்த்த போனி கபூர் நீங்கள் தான் அஜித் நடிக்கும் பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்கவேண்டும் என்று கூறியுள்ளார். ‘நேர்கொண்ட
 

நடிகர் அஜித் இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் மூன்றாவதாகவும் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான எச் வினோத் தனது முதல் படத்திலியே தமிழ் சினிமாவின் நம்பிக்கை இயக்குனராக அறியப்பட்டார். அதே போல கார்த்தியை வைத்து ‘தீரன் அதிகாரம் படம்’ இயக்கி அனைவைரையும் ஆச்சர்யப்பட வைத்தார். வினோத்தின் திறைமையைப் பார்த்த போனி கபூர் நீங்கள் தான் அஜித் நடிக்கும் பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தையும் திறம்பட இயக்கியிருந்தார் வினோத். அதையடுத்து இந்தக் கூட்டணி ‘வலிமை‘ படத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றனர். படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

தற்போது அஜித் மீண்டும் எச் வினோத் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக கோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தின் கதை இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் போனி கபூரே தயாரிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அஜித் ஏற்கனவே சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம் படத்தில் ஆரம்பித்து வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு படங்கள் இணைந்து பணியாற்றினார். தற்போது வினோத் உடன் மூன்று படங்கள் தொடர்ந்து பணியாற்ற இருப்பதாகக் கூறப்படுகிறது.