×

வலிமை ரிலீஸ் ஆவதற்கு முன்பே வினோத் இயக்கத்தில் அடுத்த படம் நடிக்கும் அஜித்!

நடிகர் அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இந்தக் கூட்டணியின் இரண்டாவது படமாக இந்த படம் உருவாகி வருகிறது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அஜித் மூன்றாவது முறையாக இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க இருப்பதாக முன்னரே தெரிவிக்கப்பட்டிருந்தது. படத்தின் தற்போதைய அப்டேட் என்னவென்றால் வலிமை படம் ரிலீசாவதற்கு முன்பே வினோத் அஜித்
 

நடிகர் அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இந்தக் கூட்டணியின் இரண்டாவது படமாக இந்த படம் உருவாகி வருகிறது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அஜித் மூன்றாவது முறையாக இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க இருப்பதாக முன்னரே தெரிவிக்கப்பட்டிருந்தது. படத்தின் தற்போதைய அப்டேட் என்னவென்றால் வலிமை படம் ரிலீசாவதற்கு முன்பே வினோத் அஜித் இணையும் இந்த மூன்றாவது படத்தின் பணிகள் துவங்கப்படும் என்று கோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜூலை மாதம் முதல் அந்தப் படத்தின் பணிகள் துவங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.


இதற்கிடையில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அஜித் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தனர். பின்னர் கொரோனா அதிகரிப்பு தீவிரமாகி வருவதால், அதைக் கருத்தில் கொண்டு கொண்டாட்டங்கள் இருக்க வேண்டாம் என்று முடிவு செய்து ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் தள்ளி வைத்திருந்தனர். எனவே விரைவில் பர்ஸ்ட் லுக் குறித்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.