×

கமிஷனர் அலுவலகம் சென்ற அஜித்… காரணம் என்ன?வைரலாகும் வீடியோ!

நடிகர் அஜித்குமார் சென்னை கமிஷனர் அலுவலக்திற்குச் சென்ற வீடீயோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித் பொதுவெளியில் வருவது மிகவும் அபூர்வமாக நடக்கும் என்றே சொல்லலாம். மக்கள் கூட்டம் அதிகமாகி விடும் என்பதால் பொதுவெளியில் செல்வதை பெரும்பாலும் தவிர்த்து வருகிறார். அதனால் தான் தன்னுடைய படத்தின் படப்பிடிப்புகளைக் கூட வெளிமாநிலங்களில் நடத்துவது வழக்கம். தற்போது அஜித் கமிஷனர் அலுவலகம் சென்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித் வழக்கமாக துப்பாக்கி சூடு
 

நடிகர் அஜித்குமார் சென்னை கமிஷனர் அலுவலக்திற்குச் சென்ற வீடீயோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் பொதுவெளியில் வருவது மிகவும் அபூர்வமாக நடக்கும் என்றே சொல்லலாம். மக்கள் கூட்டம் அதிகமாகி விடும் என்பதால் பொதுவெளியில் செல்வதை பெரும்பாலும் தவிர்த்து வருகிறார். அதனால் தான் தன்னுடைய படத்தின் படப்பிடிப்புகளைக் கூட வெளிமாநிலங்களில் நடத்துவது வழக்கம்.

தற்போது அஜித் கமிஷனர் அலுவலகம் சென்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித் வழக்கமாக துப்பாக்கி சூடு பயிற்சிக்காக ரைபிள் கிளப் செல்வது வழக்கம். அப்படி இன்றும் ரைபிள் கிளப் சென்ற போது தவறுதலாக கமிஷனர் அலுவலகத்திற்குள் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. உனக்கே அங்கு கூட்டம் கூடிவிட்டது. அப்போது அங்கிருந்த ரசிகர்களுடன் அஜித் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.

இந்த லேட்டஸ்ட் புகைப்படங்களில் அஜித் மொட்டைத் தலையுடன் கருப்பு டி-சர்ட் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்து காணப்படுகின்றார். வலிமை படத்திற்காகத் தான் இந்த கெட்டப் என்றும் கூறப்படுகிறது.