×

“ஒரு குளோஷப் ஷாட் எடுக்கப்பட எத்தனை உழைப்பு தேவை” – வில்லன் நடிகரை புகழ்ந்த இயக்குனர் சேரன்…

ஒரு குளோஷப் ஷாட் எடுக்கப்பட எத்தனை உழைப்பு தேவை என பிரபல வில்லன் நடிகரை இயக்குனர் சேரன் புகழ்ந்துள்ளார். முன்னணி இயக்குனராகவும், நடிகரும் தமிழ் சினிமாவில் வலம் வருபவர் சேரன். பன்முக திறமைக் கொண்ட இவர் ‘ஆட்டோகிராப்’ என்ற படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். இதையடுத்து அவர் இயக்கிய படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சமீபத்தில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு புகழ்பெற்றார். தற்போது கௌதம் கார்த்திக் – நந்தா பெரியசாமி கூட்டணியில் உருவாகும் படத்தில் முக்கிய
 

ஒரு குளோஷப் ஷாட் எடுக்கப்பட எத்தனை உழைப்பு தேவை என பிரபல வில்லன் நடிகரை இயக்குனர் சேரன் புகழ்ந்துள்ளார்.

முன்னணி இயக்குனராகவும், நடிகரும் தமிழ் சினிமாவில் வலம் வருபவர் சேரன். பன்முக திறமைக் கொண்ட இவர் ‘ஆட்டோகிராப்’ என்ற படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். இதையடுத்து அவர் இயக்கிய படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சமீபத்தில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு புகழ்பெற்றார்.

தற்போது கௌதம் கார்த்திக் – நந்தா பெரியசாமி கூட்டணியில் உருவாகும் படத்தில் முக்கிய கேரக்டரில் சேரன் நடித்து வருகிறார். ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் வில்லனாக டேனியல் பாலாஜி நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் திண்டுக்கல் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் டேனியல் பாலாஜி நடிக்கும் காட்சிகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு குளோஷப் ஷாட் எடுக்கப்பட எத்தனை உழைப்பு.. எவ்வளவு பேருக்கு நடுவில் ஒரு நடிகன் தன் உணர்ச்சிகளை முகத்தில் எந்த பதட்டமுமின்றி காட்டவேண்டும்.. இங்கே டேனியல்பாலாஜி.. நான் ரசிக்கும் வளரும் கலைஞன்.. கூடவே நமோநாராயணன் என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.