×

இது மேலயும் காத்திருக்க முடியாது… இந்தியன் 2 படத்திலிருந்து விலகும் ஒளிப்பதிவாளர்!?

இந்தியன் 2 படத்திலிருந்து ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவும் விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்திற்கான படப்பிடிப்பு தொடக்கி நடந்து வந்தது. படம் ஆரம்பித்தது முதலே படபிடிப்பில் அதிக தாமதம் ஏற்பட்டு வந்தது. அதையடுத்து இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் இறந்தனர் . அதையடுத்து படம் பல மாதங்களாக முடங்கியது. இந்தியன் 2 படத்தில் அதிகளவு தாமதம் ஏற்படுவதால் முதலில் இப்படத்தில் கமிட் ஆகியிருந்த ரவிவர்மன் விலகினார். ரவிவர்மனை அடுத்து ரத்னவேலு
 

இந்தியன் 2 படத்திலிருந்து ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவும் விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்திற்கான படப்பிடிப்பு தொடக்கி நடந்து வந்தது. படம் ஆரம்பித்தது முதலே படபிடிப்பில் அதிக தாமதம் ஏற்பட்டு வந்தது. அதையடுத்து இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் இறந்தனர் . அதையடுத்து படம் பல மாதங்களாக முடங்கியது.

இந்தியன் 2 படத்தில் அதிகளவு தாமதம் ஏற்படுவதால் முதலில் இப்படத்தில் கமிட் ஆகியிருந்த ரவிவர்மன் விலகினார். ரவிவர்மனை அடுத்து ரத்னவேலு இப்படத்தில் ஒளிப்பதிவாளராக இணைந்தார். தற்போது ரத்தினவேலுவும் இப்படத்திலிருந்து விலக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்றே தெரியாததால் வேறு எந்த படங்களிலும் கவனம் செலுத்த முடியவில்லை என்று அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியன் 2 படத்தில் என்ன தான் பிரச்னை, ஏன் படப்பிடிப்பு தொடங்க இவ்வளவு தாமதம் என்று தெரியாமல் குழம்பியுள்ளனர் கோலிவுட் ரசிகர்கள்!